மட்டக்களப்பு மாட்டத்தில் கடந்த சில தினங்களாக செய்துவரும் அடை மழை காரணமாக பொதுமக்கள் பலத்த இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பழுகாமம், பெரியபோரதீவு, வெல்லாவெளி, தும்பங்கேணி, கோவில்போரதீவு, பேன்ற பகுதிகளில் அமைந்துள்ள குளங்கள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் நவகிரி, உன்னிச்சை, உறுகாமம், கித்துள்வெவ, கட்டுமுறிவு, போன்ற பெரிய குளங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலம்பாவெளியில் 50.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மட்டக்களப்பு நகரில் 54.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடா பகுதியில் 116 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கெ.சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல கிராமங்களின் உள்வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதானால் கிராம மக்களின் உள்ளுர் போக்குவரத்துக்களிலும் பலத்த சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
பொரும்போக வேளாண்மை செய்கைப ;பண்ணப்பட்டுள்ள தாழ்நில வயற் பிரதேசங்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப் பட்டுள்ளதனால் நெல்வயல் எது, குளம், எனது என இனம் காணமுடியாத அளவிற்று வெள்ளம் சூழ்ந்துள்ளதனால், விவசாயிகளும் பலத்த சிரம்ஙகைள எதிர் கொண்டு வருகின்றர்.
இந்நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள கிராமங்களில் தேங்கிநிற்கும் வெள்ள நீரை வாய்க்கால்ளைத் தேண்டி ஆறு மற்றும், கடலைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை முன்நெடுத்துள்ளதாக மண்முனை தென் தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment