7 Nov 2015

உப்பூறல் கிராமத்தில் இருந்து இலங்கைத்துறை முகத்துவரத்திற்கான பஸ்சேவை மாணவர்களின் நன்மகருதி பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

SHARE
உப்பூறல் கிராமத்தில் இருந்து இலங்கைத்துறை முகத்துவரத்திற்கான பஸ்சேவை மாணவர்களின் நன்மகருதி பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் கிராமத்தில் இருந்து இலங்கைத்துறை முகத்துவரத்திற்கான பஸ்சேவை மாணவர்களின் நன்மை கருதி பத்து வருடங்களின் பின்னர் மீண்டும்  வியாழ க்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.
                                
கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது லங்காப்பட்டினப்பாலம் உடைக்கப்பட்டதன் பின்னர்  இவற்றிற்கான பஸ்சேவை இடை நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் உப்பூறல், சீனன்வெளி போன்ற கிராமங்களில் இருந்து லங்காப்பட்டினத்தில் உள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதேச செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பிரதேச செயலாளர் மூதூர் டிப்போ முகாமையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இவ் பஸ்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது லங்கப்பட்டினம் பாலம் உடைக்கப்பட்டதன் பின்னர் இக் கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதக காணப்படுகின்றது. அடிப்படைவசதி ஏதும் அற்ற நிலையிலையே இக் கிராமங்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.


சில  பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பொருளாதார நெருக்கடி காரணமாக கூலி வேலைக்கு அனுப்பியும், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுத்தியும் வருகின்றமை காரணமாகவும்.  இப் போக்குவரத்து பிரச்சினை காரணமாகவும், சுமார் 75 வீதமான மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகலுக்கு உள்ளாகியுள்ளனர். 

அதே வேளை  சுமார் 121 மாணவர்கள் இக் கிரமத்தில் இருந்து இலங்கைத்துறை முகாத்துவரத்தில் அமைத்துள்ள பாடசாலைக்கு பலத்த சிரமத்தின் மத்தியில் சென்று வருவதாகவும்.  எமது செயலக சிறுவர் மேம்பாட்டு பிரிவுக்கு முறைப்பாடா கிடைக்கப்பெற்றது.  இதனை கருத்தில் கொண்டே இவ் பஸ்சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதேவேளை குடும்பவருமானம் குறைந்த 90 மாணவர்களுக்கு   பருவக்கால சீட்டுக்களை கொள்வனவு செய்து  இலவச போக்குவரத்திற்கான ஏற்பாடுகள்  செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: