7 Nov 2015

கிழக்கு ஆளுநரினால் கைத்தொழில் கண்காட்சி திறந்து வைப்பு

SHARE
கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழிற் துறைத்திணைக்களமும் கிராம அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்தும் "மலரும் கிழக்கு" கைத்தொழில் கண்காட்சி நேற்று (06)  காலை கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாந்துவினால் திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை உப்புவெளியிலமைந்துள்ள கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழிற்துறைத் திணைக்களத்தின் கைத்தொழில் வலயத்தில் நடைபெற்று வரும் இக்கண்காட்சி   “கிழக்கிலங்கைக் கைத்தொழில்துறையின் ஒரு புதிய யுகம்” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்று வருகின்றது. 
நடைபெற்று வரும் இக் கண்காட்சியில் 17 காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி இன்று  (07) வரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். இங்கு அமைக்கப்பட்டுள்ள கூடங்களில் நெசவு உற்பத்தி மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினுடைய கூடங்கள் அதிதிகளின் கவனத்தை மிகவும் ஈர்த்ததாக அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்கள், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
SHARE

Author: verified_user

0 Comments: