மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட 38 ஆம் கிராமத்தில் அமைந்துள்ள வயலினுள் காட்டு யானை ஒன்று இன்று திங்கட் கிழமை (30) மர்மமான முறையில் இறந்துள்ளதாக, வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுவட்டார அதிகாரி என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது…
38 ஆம் கிராமத்தில் அமைந்துள்ள வயற் பகுதியில் காடடு யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய அவ்விடத்திற்கு நாம் நெரில் சென்று பார்வையிட்டுள்ளோம். 25 வயது மதிக்கத்தக்க பெண் யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்த காட்டு யானையின் மரணம் தொடர்பில் எமது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளோம், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னரே இறப்புக்கான காரணம் சரியான முறையில் உறுதிப்படுத்த முடியும்.
இவ்யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக வேண்டி எமது திணைக்களத்திலுள்ள வைத்தியர் அம்பாறையிலிருந்து வருகைதரவுள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னரே யானையின் உடலை அப்புறப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவிததார்.
இறந்துள்ள யானையின் உடலை வெல்லாவெனளி பொலிசார், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள், போரதீவுப்பற்று பிரதேசெயலக உத்தியோகஸ்தர்க்ள நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மிக அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் காட்டுயானைகளின் அட்டகாச்ங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்தகும்.
0 Comments:
Post a Comment