3 Nov 2015

ஆளுமை மிக்க சமூகத்தினை கட்டியெழுப்பக் கூடிய திறன் சாரண மாணவர்களில் தங்கியுள்ளது.

SHARE
(இ.சுதா )

இலங்கையின் கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப் பட்டுள்ளவாறு ஆளுமை மிக்க சமூகத்தினை கட்டியெழுப்பக் கூடிய திறன் சாரண மாணவர்களில் தங்கியுள்ளது. பாடசாலையிலிருந்து சமூகம் எதிர் பார்க்கின்ற வெளியீடு சிறந்ததாக அமைய வேண்டும். சாரண மாணவர்களுக்கு சமூகத்தில் தனியிடம் உண்டு காரணம் சாரணியக் கொள்கையுடன் சமூகத்திற்கு ஏற்றவாறு அவர்களின் மனப்பாங்கு வளர்க்கப் படுகின்றமை இதற்கு சான்றாகும். மண்முனை தென் எருவில் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.திரவியராஜா இவ்வாறு தெரிவித்தார்.

சாரண மாணவர்களுக்கு சின்னஞ் சூட்டும் நிகழ்வு திங்கட் கிழமை(02) மட்.உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.பேரின்பராசா தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டிவிட்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் தெரிவிக்கையில்… பாடசாலைக் கலைத்திட்டத்தில் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் சாரணர் மாணவ குழுக்களை அமைத்து பயிற்சிகள் வழங்குவது முக்கியமானதாகும். சாரணியத்தின் கொள்கைகள் இகோட்பாடுகள் சமூகத்தினை வழிநடத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளன. கல்விக் கொள்கைகள் மூலமாக எதிர் பார்க்கப்படுகின்ற விளைதிறன் சாரண மாணவர்களின் செயற்பாடுகளில் தங்கியுள்ளது. அதற்கு ஏற்றவகையில் சாரண மாணவர்களைப் போன்று ஏனைய மாணவர்களும் செயற்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: