தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை பெரும்பான்மை மக்கள் புரிந்து கொள்ளாதவரை இந்த நாட்டிலே நல்லாட்சி மலராது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற விடயத்தில் இன மத கட்சி பேதமின்றி ஒருமித்து குரல்கொடுத்ததைப் போன்று இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் பெரும்பான்மை மற்றும் தமிழ் முஸ்லிம் தலைமைகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.
மட்டக்களப்பு உறுகாமம் சரஸ்வதி வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்
´இந்த நாட்டிலே நல்லாட்சி அமையவேண்டும் என்பதற்காக மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தோம்.
இலங்கைத் தீவிலே தமிழ் மக்கள் நீண்ட காலமாக பிரச்சினையை எதர்நோக்குகிறார்கள் என்பதை கடந்த கால ஆட்சியாளர்கள் முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமும் உணர்ந்துகொள்ளவில்லை என்பதை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அவர்களின் நலுவல் போக்கிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற விடயத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஜேவிபி போன்றவர்களும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கட்சி பேதங்களை மறந்து ஒருமித்து குரல்கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
கைதிகளின் விடுதலை தொடர்பில் ஏற்பட்ட ஒற்றுமை தேசிய இனப்பிரச்சினை தீர்வு வியத்திலும் இருக்குமானால் எமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் வெகுவிரைவில் பெற்றுகொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.
0 Comments:
Post a Comment