தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்
பூ.பிரசாந்தனை இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோது, அவரை எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார். 2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த 23ஆம் திகதி பூ.பிரசாந்தன் காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்
0 Comments:
Post a Comment