18 Nov 2015

காட்டு யானையின் தாக்குதலில் பொது நூலகத்தின் வாயிற் கதவு மற்றும் சுற்று வேலி சேதம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட தும்பங்கேணியில் அமைந்துள்ள பொது நூலகத்தின் வாயிற் கதவு, மற்றும் சுற்று வேலி போன்றவற்றை செவ்வாய்க் கிழமை இரவு காட்டு யானை தாக்கிய உடைத்து சேதப்படுத்திச் சென்றுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் சன சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.கருணாநிதி தெரிவித்தார்.

வழங்கம் போல் செவ்வாய்க் கிழமை (17) மாலை இப்பொது நூலகத்திற்குப் பொறுப்பான நூலகர் வாயிற் கதவை பூட்டி விட்டு வந்துள்ளார். புதன் கிழமை (18) காலை சென்று பார்க்கும்போதே இச்சம்பவம் தொரியவந்துள்ளது.  இதனால் சுமார் 50000 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்விடையம் தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளருக்கு அறிவித்துள்ளளதாகவும்,  சன சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.கருணாநிதி மேலும் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் இவ்வாரத்திற்குள்ளோயே மூன்று இடங்களில் இவ்வாறு காட்டு யானையின் தாக்குதல்களினல் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: