10 Nov 2015

வீதி விபத்துக்களைக் குறைத்தல் தொடர்பான பாடசாலை மணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

SHARE
(இ.சுதா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் களுவாஞ்சிகுடி வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் துரிதமாக முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து விதிகள் மற்றும் வீதி விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் இவ்விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு திங்கட்கிழமை (09) பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடாத்தினர்.
வித்தியாலய அதிபர் எஸ்.பேரின்பராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய வீதிப்போக்குவரத்துப் பொலிஸார் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

செயலமர்வில் வீதிவிபத்துக்கள் தொடர்பான காணொலிகள் மற்றும் விபத்துக்களை தவிர்பதற்கான ஆலோசணைகள் மற்றும் வீதி ஒழுங்கு தொடர்பான விளக்கங்கள் பொலிஸாரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.  

SHARE

Author: verified_user

0 Comments: