வறுமைக்கோட்டின் கீழுள்ள யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் தொழிற்பயிற்சி சம்மந்தமான முழுநாள் செயலமர்வொன்று சனிக்கிழமை (07) நடைபெற்றது.
உலக தரிசன அமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பு தும்பங்கேணியில் அமைந்துள்ள வேள்விஷன் நிறுவனத்தின் காரியாலயத்தில் பிரண்டீனா எனும் நிறுவனத்தினால் இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.
உலக தரிசன அமைப்பினால் தையல் பயிற்சியளிக்கப்பட்டுவரும் யுவதிகள், மற்றும் போரதிவுப்பறுப் பிரதேசத்தில் தொழில்வாய்ப்பற்றிருக்கும் யுவதிகள் என 75 இற்கு மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
தகுதிக்கேற்ற தொழில்வாய்ப்புக்களைப் பெறுதல் தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்றாக வேண்டி யுவதிகள் எவ்வாறான பயிற்சிகளைப் பெற்றிருத்தல் வேண்டும், போன்ற பல விடையங்கள் இதன்போது எடுத்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment