மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றம் எனும் புதிய அமைப்பினால் நடைபெற்ற மாவீரர் தின சுடர் ஏற்றும் நிகழ்வு
மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றம் எனும் புதிய அமைப்பொன்றினால் இன்று வெள்ளிக் கிழமை (27) மாலை மட்டக்களப்பில் மாவீரர் தின சுடர் ஏற்றும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பி.இந்திரகுமார், மா.நடராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களாகிய மேற்படி உறுப்பினர்கள், ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரையோ அல்லது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் பெயரையோ பயன்படுத்தாமல் புதிதாக மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றம் என்ற பெயரை உருவாக்கியுள்ளார்கள் என பலரும் சிந்திக்கின்றனர்.
இதுஇவ்வாறு இருக்க மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றம் தொடர்பில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவரிடம் வினவியபோது…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரிலோ அல்லது கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் பெயராலோ மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றும் நிகழ்வை நடாத்துவதற்கு அனுமதி பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கும். இதன் காரணமாகத்தான் மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றம் எனும் ஒரு அமைப்பின் மூலம், இந்நிகழ்வு நடாத்தப்பட்டது. என அவர் தெரிவித்தார்.
தமிழ் உணர்வாரள்கள் ஒன்றிணைந்து நாம் தற்போது மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றம் எனும் புதிய அமைப்பொன்றினை உருவாக்கியுள்ளோம். இவ்வமைப்பின் மூலம் எதிர் காலத்தில் பல செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம். தமிழ் உணர்வு படைத்த யாவரும் இவ்வமைப்பில், இணைந்து கொள்ளலாம் என இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப் படுத்தும், மட்டக்களப்பைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறான நிகழ்வு மேற்படி மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றம் எனும் புதிய அமைப்பு பற்றி எமக்குத் தெரியாது எனவும், ஆனால் மாவீரர் சுடர் ஏற்றுவதற்றுகு எமக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை எனவும் தெரிவித்தனர்.
இலங்கையில் பலம் பொருந்திய தமிழ் அரசியற் கட்சியக் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் இந்நிலையில் ஏன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றும் நிகழ்வில் ஒன்றிணைந்து செயற்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏன்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment