18 Nov 2015

மாணவர்களுக்கான இலவச கல்விக்கருத்தரங்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும்

SHARE
நற்பிட்டிமுனை ‘மென்ஸ்’ சமூக சேவைகள் அமைப்பும் அதன் விளையாட்டுக்கழகமும் இணைந்து ஏற்பாடுசெய்த இம்முறை க.பொ.தராதர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக்கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வும் வழிகாட்டிய ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அல்-அக்ஷா மகா வித்தியாலையத்தின் ஆரம்பப்பிரிவு
மண்டபத்தில் (14.11.2015)மாலை அமைப்பின் தலைவர் ஜெ.எம்.அயாஸ் தலைமையில் நடைபெற்றது. அதிதியாக கலந்து கொண்ட நெடுஞ்சாலைகள் போக்குவரத்து, உயர்கல்வி அமைச்சின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எச்.எச்.எம்.நபார் உரையாற்றுகையில், மாணவர்களின் வெற்றி இந்தக் கிராமத்தின் வெற்றியாகும். அதற்;காக மென்ஸ் சமூகசேவைகள் அமைப்பு கல்வி அபிவிருத்திக்கான நிலையம் ஆரம்பித்து எதிர்காலத்தில் இதனூடாக சேவையாற்றவுள்ளோம். கிராமத்திலிருக்கின்ற அனைவரும் மாணவர்களின் கல்வியை அபிவிருத்திசெய்ய முன்வர வேண்டும். எதிர்வரும் க.பொ.தராதர பரீட்சையில் 9ஏ சித்தியை பெறும் அனைவருக்கும் மடிகணனி வழங்கப்படும் எனவும் கூறினார். நிகழ்வில் கரைவாகு வடக்கு ஐ.தே.க மத்தியகுழு தலைவர் பி.ரீ.சாலித்தீன், ஆசிரியர்கள் மற்றும் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் ஆகியோருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பட்டது. 







SHARE

Author: verified_user

0 Comments: