மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் இருமரங்கிலும் இனம்தொரியானவர்கள், இறைச்சிக் கோழியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மூட்டைகளில்; இட்டு இவ்வீதியில் உள்ள பற்றைக் காடுகளுக்குள்ளும், வீதியிலும் அதிகாலை வேளை வீசிவிட்டு செல்வதாக பிரயாணிகளும், துறைநீலாவணைக்கிராம பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் வீதியில் பயணிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், அரச ஊழியர்கள் மிகுந்த அசௌசரிகங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் துர்நாற்றத்தை சகித்துக் கொள்ளமுடியாமல் மூக்கைப் பொற்றிக் கொண்டு செல்லும் துர்ப்பாக்கிய நிலையில் செல்கின்றதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் விற்பனை செய்யும் கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் சட்டதிட்டத்திற்கு முரணான வகையில் இக்கோழிக் கழிவுகளை அதிகாலை வேளை வீசிவிடுகின்றனர். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அதிகளவான கோழிக் கழிவு மூடைகள் இவ்வீதியில் சூட்சூமமான முறையில் வீசிவிட்டு செல்கின்றனர்.
இவ்வீதியை துறைநீலாவணை கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கங்கள், பொதுமக்கள் போன்றவர்கள் மாதத்திற்கு ஒரு தடவை கிராமத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் சிரமதானம் மூலம் துப்பரவு செய்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் வீட்டுக்கழிவுகள், பிளாஸ்ரிக் பொருட்கள், இலத்திரணியல் உபகரணங்கள், பழைய போத்தல்கள், பழைய வீட்டுக்கழிவுகள் என்பவற்றையெல்லாம் வீசி வருகின்றனர். கோழி இறைச்சி விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு, அனுமதிப்பத்திரம் வழங்கும் போது கோழிக்கடைகளின் கழிவுகளை உரிய முறையில் சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்காமல் அக்கழிவுகளை உரிய முறையில் அகற்றுவுதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது சாலச்சிறந்ததாகும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடையத்தில், கரிசனை செலுத்தி சட்டத்திற்கு முரணான முறையில் செயற்படும் நபர்களைக் கண்டுபிடித்து, இதற்குரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென துறைநீலாவணைக் கிராம மக்களும் இக்குறித்த வீதியைப் பயன்படுத்தும் பிரயாணிகளும், எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் தமது பிரதேசத்திற்குள் அத்துமீறி இவ்வாறு வீதி ஓரங்களிலும், குளக்கரைகளிலும், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கோழி இறைச்சிக் கடை உரிமையாளர்கள் கழிவுகளைக் கொட்டுவது தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை கல்முனை மாநகர சபையுடன் தொடர்பு கொண்டு மிகவிரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை நீலாவணைப் பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் எஸ்.வேணிதரிடம் இன்று திங்கட் கிழமை (02) தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment