16 Nov 2015

பயனாளிகளுக்கான காசோலை வழங்கி வைப்பு

SHARE
நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்பு அமைச்சின் நிதி உதவி மூலம் சுகாதார நலனை மேன்படுத்தவும், நீர் வளத்தை பாதுகாக்கவும், மட்டக்களப்பு மாவட்ட மன்முனை மேற்கு பிரதேச
செயலாளர் பிரிவில் வசதி குறைந்த குடும்பங்களுக்கான சுகாதார மேம்பாட்டு செயற்திட்டம் (மலசலகூடம்) தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் கிராமிய நீர் மற்றும் சுகாதார பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் முதலாம் கட்ட கட்டுமாண பணிகளை பூர்த்தி செய்த 60 பயனாளிகளுக்கு, தலா 10000 ரூபாய் வீதம் 6 லெட்சம் ரூபாய் பொறுமதியான காசோலைகள், இன்று திங்கட் கிழமை (16) மன்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் வைத்து பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
மன்முனை மேற்கு பிரதேச பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்  பெற்ற இந்நகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரீ. நிர்மலராஜ், கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் சமூகவியலாளர்; எம்.எஸ்.எம். சறூக் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.  




SHARE

Author: verified_user

0 Comments: