கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அபிவிருத்தித் திட்ட நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்ட மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
மீன்பிடித்துறையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராசசிங்கம் கலந்துகொண்டதுடன், விவசாய அமைச்சின் செயலாளர் சிவநாதன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மீனவ அமைப்புகளின் அங்கத்தவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடித் துறையினை வளப்படுத்தும் முகமாகவும் நன்நீர் மீன்பிடியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் அமைச்சரின் நடவடிக்கையின் மூலம் அபிவிருத்தி நிதியில் இருந்து மேற்படி மீன்பிடி வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்டத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட மதுரங்கேணி மீனவர் கூட்டுறவுச் சங்கம், முறக்கொட்டான்சேனை மீனவர் கூட்டுறவுச் சங்கம், மயிலவட்டவான் மீனவர் கூட்டுறவுச் சங்கம், புதூர் அன்னைவாவி மீனவர் கூட்டுறவுச் சங்கம், வெலிக்காகண்டி செந்தாமரை மீனவர் கூட்டுறவுச் சங்கம், புதுக்குடியிருப்பு மீனவர் கூட்டுறவுச் சங்கம், வாகனேரி நன்நீர் மீனவர் கூட்டுறவுச் சங்கம், வடமுனை மீனவர் கூட்டுறவுச் சங்கம், வவுணதீவு சின்னப்புக் குளம் மீனவர் கூட்டுறவுச் சங்கம் போன்ற அமைப்புகளுக்கே இம் மீன்பிடி வலைகள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது மீனவ சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரினால் கேட்டறியப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments:
Post a Comment