28 Nov 2015

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு உள்ளது என்கிறார் அரியம்.

SHARE

(திலகஸ்) 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்னும் கருத்தினை அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே குறிப்பிட்டிருந்தார். இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தலைவர் இரா.சம்பந்தன் எதற்காகக் இக்கருத்தினை தெரிவித்தார் என்பது எனக்குப் புரியவில்லை. அக்கருத்தினை நான் ஏற்றுக் கொள்ளவில்லை 
கடந்த 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிக்கப்படுகின்றமையையும், தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று இருந்த தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.வ், ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். இதில் அதிகமான பங்களிப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தையே சாரும் அதில் நானும் இடம்பெற்றிருந்ததன் காரணமாகத்தான் என்னால் அக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லைஎன்றார். 

எனத் தெரிவித்த அவர், கடந்த 2002 ஆம் ஆண்டு 16 உறுப்பினர்கள் அம்முறை நட படைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலே வெற்றி பெற்றனர். அடுத்த தேர்தலிலே 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வடகிழக்கில் வேட்பாளர்களை தீர்மானித்ததும் விடுதலைப் புலிகள் தான் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: