30 Nov 2015

மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

SHARE

(இ.சுதா)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று திங்கட்கிழமை  (30) கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்திப் தலைமையில் நடைபெற்றது.

விழிப்புணர்வுச் செயலமர்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற திவிநெகும வாழ்வின் எழுச்சி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற ஏனைய பிரிவினைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மனித உரிமையின் பாதுகாப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள், அனைத்துலக மனித உரிமைகள் தொடர்பான விளக்கங்கள், வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: