சர்வதேச எச்.ஐ.வி. தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி. நோய் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று இன்று சனிக்கிழமை (28) கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்களம், ஆகிய மூவினங்களையும் சேர்ந்த 50 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது எச்.ஐ.வி. நோய் தொற்றும் காரணிகள், இந்நோய் தொற்றாமலிருப்பதற்கான வழிமுறைகள், மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், இந்நோய் தொடர்பான விடையங்களை ஊடகங்களில் எவ்வாறு வெளிக்கொணர்வது போன்ற பல விடையங்கள் இதன்போது எடுத்துரைக்கப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.அலாவூதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.முருகானந்தம், தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவு நிபுணர் வைத்தியர் சத்தியா ஹேரத், உட்பட பல வைத்தியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு எச்.ஐ.வி. நோய் தொடர்பான கருத்துக்களை வழங்கினர்.
0 Comments:
Post a Comment