9 Nov 2015

நாற்பதுவட்டை கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

SHARE
மட்டக்களப்பு தாந்தாமலைப் பிரதேசத்திற்குட்பட்ட பொதுமக்கள்  இலவச மருத்துவ முகாம், மற்றும், மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்  தாந்தாமலைப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதுவட்டை கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்  ஒன்று இன்று (09) திங்கட் கிழமை  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையும், உக்டா நிறுவனமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான தாந்தாமலை, நாற்பதுவட்டை, நெல்லிக்காடு போன்ற மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்நடமாடும் வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இம்மருத்துவ முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட நோயாளர்கள் வருகைதந்து சிகிச்சை பெற்று செல்லவாக குறித்த மருத்துவமுகாமை ஒழுங்கு செய்துள்ள மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.




SHARE

Author: verified_user

0 Comments: