1 Nov 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாவடிஓடை பகுதிக்கு விஜயம்

SHARE
கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராசசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஸ்ரீநேசன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா  உட்பட குழுவினர் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடி ஓடை பகுதிக்கு கள விஜயத்தினை மேற்கொண்டனர்.
இவ்விஜயத்தின் போது மாவடி ஓடை பாலத்தின் குறைபாடுகள் பற்றி அக்குழுவினர் பார்வையிட்டனர். இதன்போது பிராந்தியத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசன அதிகாரியும் இவ்விஜயத்தில் கலந்து கொண்டார். 
இப்பாலத்தின் குறைகள் பற்றி நீர்ப்பாசன அதிகாரியுடன் கலந்துரையாடிய பின்னர், தற்காலிகமாக இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரச அதிபருடன் கலந்துரையாடி மாவட்ட செயலகமும், பிரர்திய நீர்ப்பாசண காரியாலமும் இணைந்து இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

Mavadi oodai
Mavadi oddai

SHARE

Author: verified_user

0 Comments: