(பழுவூரான்)பழுகாமம் தேசிய சேமிப்பு வங்கியினால் நேற்றைய(31) தினம் புகைத்தல் மற்றும் போதைவஸ்து தொடர்பான விழிப்புணர்வு பழுகாமத்தில் இடம்பெற்றது.
தேசிய சேமிப்பு வங்கி மற்றும் புகையிலை மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை இணைந்து நாடு முழுவதும் எமது இல்லம்
போதையில் இருந்து விடுபட்டுள்ளது, உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்குகிறது” எனும் தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பழுகாமம் தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பழுகாமம் இளைஞர்களும் கலந்துகொண்டு அதுதொடர்பான துண்டுப்பிரசுங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment