15 Nov 2015

துறைநீலாவணை 5ம் வட்டார பிரதான வீதி துரிதகதியில் புனரமைக்கப்படுமா மக்கள் கேள்வி

SHARE
(இ.சுதா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான துறைநீலாவணைக் கிராமத்தின் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு உரித்தான பிரதான வீதி பலவருட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் குண்டும் குழியுமாகக் காணப்பட்டமை தொடர்பாக கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்திச்
சங்கங்கள் இஆலயங்கள் ஏனைய பொது அமைப்புக்களின் ஊடாக எழுத்து மூலமான கோரிக்கைகள் மாவட்ட செயலகம் இகிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் இஅமைச்சுக்கள் மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இமாகாண சபை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக பிரதான வீதியின் அரைவாசி அண்மையில் புனரமைக்கப்பட்டன.

இருந்தபோதிலும், இவ்வீதியின் மிகுதி அரைவாசிப் பகுதி பல வருடகாலமாக எதுவிதமான நடவடிக்கைகளும் இல்லாத நிலையில் செயற்பாடுகள் முடக்கிக் கிடக்கின்றன. துறைநீலாவணை அரசடித்துறை வீதி முதல் கண்ணகி அம்மன் ஆலயம் வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் கொண்ட இவ்வீதி இதுவரைக்கும் புனரமைக்கப்படாத நிலையில் குன்றும் குழியுமாகக் காணப்படுவதுடன் மழை காலங்களில் வீதியில் நீர் தேங்கிக் காணப்படுவதனால் பிரயாணம் செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியின் இருமருங்கிலும் ஆலயங்கள் மற்றும் துறைநீலாவணைக் கிராமத்தின் வாசகர்களை ஒன்றிணைத்து மகிழ்ச்சிப் படுத்துகின்ற பொது நூலகம் ஆரம்பப் பிரிவு பாடசாலையான சித்தி விநாயகர் வித்தியாலயம் மற்றும் கல்லாறு துறைநீலாவணை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச்  சொந்தமான கோப் சிற்றி, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் கட்டிடம், கண்ணகி பாலர் பாடசாலை போன்றன அமைத்துள்ள இந்நிலையில் இவ்வீதி புனரமைக்கப்படாமை தொடர்பாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

துறைநீலாவணைக் கிராமம் தனித் தமிழ்க் கிராமம் என்ற ரீதியிலும் எல்லைக் கிராமம் என்ற வகையிலும் அரசியல் வாதிகளின் பார்வையில் இக் கிராமத்தில் அபிவிருத்திகள் மந்தகதியிலேயே செல்கின்றன.
கடந்த கால அரசாங்கத்தினால் பல வீதிகள் புனரமைக்கப்பட்ட போதிலும் எல்லைக் கிராமமான துறைநீலாவணைக்கிராமத்தின் பிரதான வீதியின் புனரமைப்பு கேள்விக் குறியாகின. 
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் மூலமாக பிரதான வீதியினை புனரமைப்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்த  வேண்டும். என்பதுதான் துறைநீலாவணைக் கிராம மக்களின் கோரிக்கையாகவுள்ளது.




SHARE

Author: verified_user

0 Comments: