நடைபெற்று முடிந்துள்ள இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் சுமுகமான முறையில் நாடுமுழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது.
அதன்பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 46.35% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் இருந்து தலா ஒருவர் வீதம் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக 32 வேட்பாளர்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள்.
கல்குடா தொகுதி
வெற்றி பெற்றவர் - கே.ஜெபகுமார் (வாகரை)
பெற்ற வாக்குகள் - 2304
தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 6532
அளிக்கப்பட்ட வாக்குகள் - 4061
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 28
செல்லுபடியான வாக்குகள் - 4037
வாக்கு வீதம் - 62.17 %
மட்டக்களப்பு தொகுதி
வெற்றி பெற்றவர் - எட்வேர்ட் ஜெயராசா பயஸ்ராஜ் (கோட்டமுனை)
பெற்ற வாக்குகள் - 1574
தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 6817
அளிக்கப்பட்ட வாக்குகள் - 3259
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 18
செல்லுபடியான வாக்குகள் - 3241
வாக்கு வீதம் - 47.8 %
பட்டிருப்பு தொகுதி
வெற்றி பெற்றவர் - பி.வதீஸ்குமார் (களுதாவளை)
பெற்ற வாக்குகள் - 431
தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 5051
அளிக்கப்பட்ட வாக்குகள் - 1209
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 11
செல்லுபடியான வாக்குகள் - 1198
வாக்கு வீதம் - 23.93%
நாடளாவிய ரீதியில் மாகாணங்களில் கிழக்கு மாகாணம் மிகவும் சிறந்த வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாகவும், மட்டக்களப்பு 46.35% வாக்குப்பதிவு செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் MLMN. நைரூஸ் அவர்கள் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment