(க.விஜி)
மட்டக்களப்பு தேசிய கல்வியக்கல்லூரிக்கு 2016 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுனர் ஆசிரிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை புதன் கிழமை முதல் (18) எதிர்வரும் 30 ஆம்; திகதிவரை மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக கல்வியக் கல்லூரி பீடாதிபதி எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்த நேர்முக பரீட்சைக்கு 1495 பேர் அகில இலங்கை ரீதியாக அழைக்கப் பட்டுள்ளதாகவும், தினமும், காலை 08.30 முதல் பி.ப 04.00 மணிவரையுள்ள காலப்பகுதிக்குள் மட்டக்களப்பு தாழங்குடா கல்வியக் கல்லூரிக்கு சமூகமளிக்குமாறும் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் தங்களின் ஆவணங்களை உரிய அதிகாரிகளுடன் அத்தாட்சிப்படுத்தி வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்,
இம்முறை பிரதேச செயலக ரீதியாக தெரிவு இடம்பெறவுள்ளதால் பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தலுடன் குறித்த நேர்முகத்தேர்வுக்கு கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு இக்கல்வியக் கல்லூரிக்கு சித்திரப்பாடத்திற்கு 553 பேரும், நாடக அரங்கியலும் பாடத்திற்கு 480 பேரும், கலையும் கைப்பணியும் எனும் பாடத்திற்கு 462 பேரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நேர்முகத்தேர்வில் வவுனியா கல்வியக் கல்லூரிக்கான ஆரம்ப கல்வி பாடத்தேர்வுக்கும், யாழ்ப்பாண கல்வியக் கல்லூரிக்கு விஞ்ஞானப் பாடத்தேர்வுக்கும், ஊவா தேசிய கல்வியக் கல்லூரிக்கு உடற்கல்விப் பாடத்திற்கும் நேர்முகப்பரீட்சைக்கு மட்டக்களப்பு தேசிய கல்வியக் கல்லூரிக்கு விண்ணப்பதாரிகள் அழைக்கப் படுவதாகவும், வடிவமைப்பு கட்டிட தொழிநுட்ப, வடிவமைப்பும் மின் இலத்திரனியல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களுக்கு குறித்த திகதிகளில் மட்டக்களப்பு தேசிய கல்வியக் கல்லூரிக்கு நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளதாவவும் பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment