2012 ஆம் ஆண்டு அதே நான்கு பிராந்தியங்களிலும் 851 நோயாளிகளும் 2013 ஆம் ஆண்டு 867 நோயாளிகளும், 2014 ஆம் ஆண்டு 836 நோயாளிகளும், 2015 ஆண்டு இன்று வரைக்கும் 874 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். என கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.
எதிர்வரும் எச்.ஐ.வி. தினத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் சனிக்கிழமை (28) எச்.ஐ.வி தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விழக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
கிழக்கு மாகாணத்திலே பதினான்கு இலட்சம் மக்கள் வாழ்கின்றனர் நான்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. இந்த பணிமனைகள் ஊடாக தொற்றுகின்ற பாலியல் நோய்கள் சம்பந்தமாக தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நான்கு சுகாதார பணிமனைகள் ஊடாகவும் இந் நோய்களை அடையாளங்காணக் கூடியவாறான பரிசோதனைகளும் இடம் பெற்று வருகின்றன.
எமது மாகாணத்தினை பொறுத்தளவில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட பாலியல் நோயாளர்களின் எண்ணிக்கையாக இதில் எச்.ஐ.வி மட்டுமின்றி ஏனைய பாலியல் நோய்கள் அடங்கலாக மொத்தமாக 2011 ஆம் ஆண்டு 801 நோயாளர்களை இனங்கண்டு இருக்கின்றோம். கல்முனை பிரந்தியத்தில் 71 நோயாளர்களும், மட்டக்களப்பு பிராந்தியத்தில் 98 நோயாளிகளும,; அம்பாரை பிராந்தியத்தில் 432 நோயாளிகளும், திருகோணமலை பிராந்தியத்தில் 200 நோயாளிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு அதே நான்கு பிராந்தியங்களிலும் 851 நோயாளிகளும் 2013 ஆம் ஆண்டு 867 நோயாளிகளும், 2014 ஆம் ஆண்டு 836 நோயாளிகளும், 2015 ஆண்டு இன்று வரைக்கும் 874 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ் நோயாளிகளில் சிலர் இற்றைவரைக்கும் தொடர் பரிசோதனை பெற்று வருகின்றனர். இந்த வருடம் மேற்கொண்ட பரிசோதனையாக கல்முனை பிரந்தியத்தில் 187 பேரும், மட்டக்களப்பு பிராந்தியத்தில் 4230 பேரையும் அம்பாரை பிராந்தியத்தில் 1239 பேரையும், திருகோணமலை பிராந்தியத்தில் 780 பேரையும் பரிசோதித்திருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் சுற்றுலா பிரயாணிகளின் தொகை கனிசமான அதிகரித்துள்ளது. இதன் விளைவாக வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாவட்டத்திலிருந்தும், சுற்றுலா மையங்களை நோக்கி வருகை தந்து கொண்டு இருக்கின்றனர். இந்தவிடயத்தில் அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அந்த வகையில் உள்வாங்கப் படுகின்றவர்களின் எண்ணிக்கையும் வருகின்ற வாகனங்களின் எண்ணிக்கையும் கூடுதலாகவுள்ளது. கிழக்கு மாகாணத்திலே வருகின்ற சுற்றுலா பிரயாணிகளின் தொகை அதிகரிப்பினால் பாலியல் நோயாளிகளின் தொகையும் அதிகரித்து சென்று கொண்டிருக்கின்றது.
இதில் பாசிக்குடா, அறுகம்பை, நிலாவெளி போன்ற இடங்களில்தான் இந்த எண்ணிக்கை மிகவும் கனிசமான அளவு அதிகரித்துள்ளது. இதனால் பலியல் சம்பந்தமான நோய்கள் அதிகரித்துச் சென்று கொண்டு இருகின்றது. இதனை நாங்கள் தடுக்கமுடியாது, அந்த வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றோம்.
எங்களது பணிமனைகள் ஊடாக இயன்றளவு பாலியல் நோய்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பலதரப்பட்ட பாதுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தாலும்கூட அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியாதுள்ளது. நிற்சயமாக அனைவரும்; உணர்ந்தால் மாத்திரமே இந்த நோயில் இருந்து விடுபட முடியும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment