4 Oct 2015

பெருமளவிலான மான் மற்றும் மரை இறைச்சி கைப்பற்றப் பட்டுள்ளன(photos)

SHARE
( ஏ.எம் றிகாஸ்)

மட்டக்களப்பு -தொப்பிகல அரசாங்க காட்டுப்பகுதியில் வேட்டையாடப்பட்டு குளிரூட்டப்பட்ட பாரிய கொள்கலன் ஒன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருமளவிலான மான் மற்றும் மரை இறைச்சி நேற்று இரவு (03.10.2015) வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளினால்
 கைப்பற்றப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் மட்டக்களப்பு  மாவட்ட வன பாதுகாப்பு அதிகாரி என்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இதுதொடர்பில் சந்தேக நபர்கள் நான்குபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

கடந்த ஓரிரு நாட்களில் வேட்டையாடப்பட்ட நூற்றுக்கணக்கான கிலோகிராம் எடைகொண்ட இந்த இறைச்சி ஏறாவூர் 4 ஆம் குறிச்சி பிரதேசத்தில் மாடிக்கட்டடம் ஒன்றின் பின்புறமாக தரிக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட பாரிய கொள்கலன் ஒன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது. 

சந்தேக நபர்களில் மூன்றுபேர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. 

சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வேட்டையாடப்பட்ட மான்கள் தோல் உரித்து துண்டங்களாக வெட்டப்பட்டு குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்தன. 

இதில் ஒருதொகுதி விற்பனைக்குத் தயாராக பொதிசெய்யப்பட்டிருந்தது. அப்பொதிகளில் பிரபல கம்பனியொன்றின் பெயர்பொறிக்கப்பட்ட லேபள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  




SHARE

Author: verified_user

0 Comments: