15 Oct 2015

வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற விழிப்புனர்வு பேரணி - களுவாஞ்சிகுடி

SHARE
இன்று சர்வதேச வெள்ளைப்பிரம்புதினம். ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் 15ம் தி கதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச ரீதியாகவும் சட்டரீதியாகவும் பார்வையற்றவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களின் சமூக
மேம்பாடு தொடர்பான சிந்தனைகளை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறுவதுமே இத்தினத்தின் நோக்கமாகும். வெள்ளைப்பிரம்பின் பிரயோகம் 1931 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள இலிநோய் மாவட்டத்தில் பியோரியா எனும் இடத்தில் உள்ள லயன்ஸ் கழகத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது.

இத்தினத்தை முன்னிட்டு ம. தெ. எ. பற்று பிரதேச செயலகமும், லயன்ஸ் கழகம்,களுவாஞ்சிக்குடி நகரம் கல்லடி உதயம் விழிப்புலனற்றோர் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தினைச் சென்றடைந்தது.

இந்நிகழ்வில் ம.தெ. எ.பற்று பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம், மற்றும் முக்கிய பிரமுவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 










SHARE

Author: verified_user

0 Comments: