உயர்தர முதலுதவிப் பயிற்சி நெறியொன்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையில் இன்று வியாழக் கிழமை (24) காலை ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது.
இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அடிப்படை முதலுதவிப் பயிற்சி பெற்று அதில் சித்திபெற்ற 22 தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
இப்பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் செயலாளர் சா.மதிசுதன், மற்றும் கிளைநிறைவேற்று உத்தியோகஸ்தர் வி.பிறேமகுரார் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
ஐந்து நாட்கள் நடைபெறும் இப்பயிறிநிநெறி எதிர் வரும் புதன்கிழமை (28) நிறைவு பெறவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் செயலாளர் சா.மதிசுதன் தெரிவித்தார்.
இப்பயிற்சி நெறியின் இறுதியில் இடம்பெறும் பரீட்சையில் சித்தி பெறும் தொண்டர்கள் பயிலுனர் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
இதில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் சிரேஸ்ட முதலுதவிப் போதனாசிரியர்களான ஆ.சோமசுந்தரம், மற்றும் முரளிதரன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்குகின்றனர்.
0 Comments:
Post a Comment