26 Oct 2015

பிரசாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

SHARE
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனை நவம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ், இன்று உத்தரவிட்டார்.2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இரவு காத்தான்குடி பொலிஸார் இவரை கைது செய்து,
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாலை ஆஜர்படுத்தியபோது இவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரினர்.
அதனடிப்படையில் இவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இவர், மீண்டும் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இவரை நவம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
SHARE

Author: verified_user

0 Comments: