மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவ தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் இணையத்தள அங்குரார்ப்பணமும் நேற்று முன்தினம் (12) பாடசாலை அதிபர் திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
2015 - 2016 ஆண்டிற்கான 42 மாணவ தலைவிகளுக்கு சின்னம் சூட்டும் இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி திருமதி உமா குமாரசாமி கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைகழக மருத்துவ பீட விரிவுரையாளர் திருமதி பேனாட் பிரகாஸ் றோசினி கலந்து கொண்டார்.
நிகழ்வில், புதிய மாணவத் தலைவிகள் கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலையின் முன்னாள் மாணவத் தலைவிகளும் கௌரவிக்கப்பட்டனர். மட்- வின்சென்ற் பெண்கள் பாடசாலையின் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவித்திக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், பாடசாலையின் இணையதளம் - www.battivincent.com பிரதம அதிதியால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன், பாடசாலையின் இணையதளம் - www.battivincent.com பிரதம அதிதியால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment