யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கு மாகாண மீனவர்கள்.
அவர்களது அடிப்படை தேவவைகள் மற்றும் சகல பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்ததர்.
இந்த திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 1038 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மீனவர்களின் பிரச்சினைளை கேட்டறிந்த அமைச்சர் மீன் விற்பனை மற்றும் ஐஸ் உற்பத்தி நிலையங்களையும் பார்வையிட்டார்.
இந்த விஜயத்தில் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment