மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனையின் கீழுள்ள போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த சாதனையாளர் பாராட்டுவிழா வியாழக்கிழமை (08) வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் போரதீவுப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே இக்கோட்டத்திலுள்ள சில அதிபர்கள், மற்றும், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, இதுதான் ஆசிரியம் எனும் தலைப்பில் இந்நவீன மேடைக்கூத்தை ஆடினர்.
கலாபூசணம், கவிஞர் க.தணிகாசலத்தினால் பழக்கபட்ட இக்கூத்தானது கல்வி கற்பதன் அவசியம், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உள்ள ஈடுபாடு, மாணவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுத்தல், என்பன உள்வாங்கப் பட்டிருந்ததோடு, போரதீவுப்பற்றுக் கோட்ட அதிகாரி, மற்றும், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் ஆகியோர் இவ்வலயத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் காட்டிவரும் அதீத அக்களைகளையும் உள்ளடக்கியதாக இக்கூத்து அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
பாடசாலைகளில் கற்பிக்கும் அதிபர், ஆசிரியர்கள், இந்நிகழ்விற்கு வந்திருந்த சபையோர் மத்தியில் திடீரென மேடையேறி கூத்தாடியபோது இவ்வாறும் கலை நயத்துடன் கற்பிக்கும், ஆசான்கள் உள்ளார்களே என போசிக்கொண்டதையும், அனைவரும் மெய்மறந்து இக்கூத்தை ரசித்ததனையும், அவதானிக்க முடிந்ததோடு, போரதீவுப்பற்றுக் கோட்ட அதிகாரி, மற்றும், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் ஆகியோரை இப்படியும் புகழ்கின்றார்கள் என பலர் பேசிக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
0 Comments:
Post a Comment