22 Oct 2015

திவிநெகும திட்டத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

SHARE

திவிநெகும வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு (22.10.2015) கல்முனை தமிழ் பிரிவு பிரதேசசெயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச திவிநெகும அதிகாரி எஸ்.சிவம், திவிநெகும முகாமையாளர் எஸ்.தியாகராஜா ஆகியோர் பயனாளிகளுக்கு  கோழிக்குஞ்சுகளை வழங்கிவைத்தனர். 54 பயனாளி குடும்பங்களுக்கு இந்த வாழ்வாதார அபிவிருத்தி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 40 பயனாளி குடும்பங்களுக்கு கோழிவளர்ப்பதற்கு தேவையான வசதிகள் ஏற்பாடுசெய்து கொடுக்கப்பட்டுள்ளது. வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஒருவருக்கு 44 கோழிக்குஞ்சுகள் விகிதம் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 14 குடும்பங்களுக்கும் 62 கோழிக்குஞ்சுகள் விகிதம் வழங்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: