30 Oct 2015

சர்வதேசத்தில் இலக்கத்தியத் துறையில் தடம்பதித்த மூத்த இலக்கியவாதி திருமதி.யோக.யோகேந்திரன் எழுதிய நூல்களின் அறிமுக விழா

SHARE

(க.விஜி)

சர்வதேசத்திலும், உள்நாட்டிலும் இலக்கத்தியத் துறையில் தடம்பதித்த மூத்த இலக்கியவாதியும், பிரபல எழுத்தாளருமான திருக்கோவிலைச் சேர்ந்த திருமதி  யோக.யோகேந்திரன் எழுதிய 03 நூல்களின் அறிமுக விழா மட்டக்களப்பு கதிரவன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அ.இன்பராஜா தலைமையில் மட்டக்களப்பு நாவற்குடா இந்துக்கலாச்சார நிலையத்தில் செவ்வாய் கிழமை (27) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி.சி.அமலநாதன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரத்தினம், கிழக்கு பல்கலைகழக அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கே.பிரேமகுமார், காந்தி சேவாசங்க தலைவர் அ.செல்வேந்திரன், நுண்கலைக் கழகத் தலைவர் மா.வேதநாயகம், உலக நண்பர்களின் அமைப்பின் தலைவர் ஏ.கங்காதரன் போரதீவுப்பற்று பிரதேச உதவி பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன், தொல்லியல் ஆய்வாளரும், முன்னாளல் நாடாளுமன்ற உறுப்பினரருமாக க. தங்கேங்ஸ்வரி மற்றும் தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உட்பட இலக்கிய வாதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இதன் போது யாழ்பாணம் நுண்கலை பல்கலைக்கழக மாணவி மதுரா யோகேந்திரனால், தமிழ்மொழி வாழ்த்துப்பாடல் பாடப்பட்டது. 
அறிமுக உரையினையும் தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணனால் நிகழ்த்தப்பட்டது. ஓய்வுநிலை ஆசிரியை திருமதி.பா. நடராஜா அவர்கள் நூலாசிரியரிடமிருந்து முதற்பிரதியை பெற்றுக்கொண்டார்.

தொலைத்துவிட்டோம் எத்தனையோ எனும் கவிதையும் அவர்கள் அப்படித்தான் எனும் சிறுகதையும் மீண்டும் ஒரு காதல் கதை எனும் நாவலும் திருக்கோயிலைச் சேர்ந்த திருமதி. யோகா.யோகேந்திரனால் இதன் போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

இந்த 03 நூல்களுக்குமான ஆய்வுரைகளினை இரா.கலைவேந்தனும், தொல்லியல் ஆய்வளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி.க.தங்கேஸ்வரியும், க.டனிஸ்கரனும், நிகழ்த்தினர். 

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் சி.அமலநாதன்; நூலாசிரியருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவத்தை வழங்கி விட்டு இதன்போது கருத்து தெரிவிக்கையில்….

கடந்த கால 30 வருட யுத்தமானது தமிழர்கள் எழுத்தாளராகவும், இலக்கிய வாதிகளாகவும் சமூகத்தில் திகழ்வதற்கு தடையாக இருந்தது. ஆனால் தற்போது  30 வருட கால யுத்தம் முடிக்கப்பட்டதினால் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் நிம்மதியாக எழுதக்கூடிய வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் உருவாகியுள்ளது. 

இதனைப் பயன்படுத்தி எமது சமூகத்தில் உள்ள இலைமறை காய் போலிருக்கும் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் எழுதுவதன் மூலம் எமது சமூகம் எழுத்தறிவுத்திறனில் உயர்ச்சி பெறும். இதனை செவ்வனே நிறைவேற்றும் போது இலக்கிய துறையில் பல பரிசில்களை பெற்று தமிழ்ச்சமூகம் எழுத்தாளர் சமூகமாக மாறும் என தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: