26 Oct 2015

மட்டக்களப்பு – களுவன்கேணியில் வெள்ளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

SHARE
மட்டக்களப்பு – களுவன்கேணியில் வெள்ளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  
களுவன்கேணி தேவாலய வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் கிருஸ்ணபிள்ளை என்ற 65 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
களுவன்கேணியில் தென்னம் தோட்டமொன்றில் காவலாளியாக பணியாற்றி வரும் இவர், கடைக்கு செல்வதற்காக சென்ற போது நீரோடையில் மூழ்கி உயிரிந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக நீரோடையின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் கடந்த 24ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் 25ஆம் திகதி காலை 8.30 வரையான 24 மணிநேரத்தில் 182.9 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இடைவிடாது தொடர்ந்து பொழியும் அடைமழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: