26 Oct 2015

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக அதிபர் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு

SHARE
(இ.சுதா)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல அரச பாடசாலைகளிலும் கல்வி கற்கின்ற சிறுவர்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சிறுவர் பாதுகபப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்
சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக அதிபர் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் காதுகாப்பு அதிகார சபை ஏற்பாடு செய்த செயலமர்வு சனிக்கிழமை (24) மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மட்டு மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டிருப்பு , மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, கல்குடா ஆகிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்ட சுமார் 80 பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புக் குழுக்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் உட்பட பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்படுகின்ற ; தண்டனைகள் இதன் மூலமாக ஏற்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விளக்கங்கள் இசிறுவர் தொடர்பாக ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு  பாடசாலை மூலமாக தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

SHARE

Author: verified_user

0 Comments: