30 Oct 2015

செட்டிபாளையத்தில் மீனவர் தங்குமடம் திறந்து வைப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மீனவர் தங்குமடம் இன்று வெள்ளிக் கிழமை (30) கிராமிய அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலியினால் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி பிரதியமைச்சரின்; 784000 ரூபாய் வீசேட நிதியோதுக்கீட்டின் கீழ் இக்கட்டம் நிருமாணிக்கப் பட்டுள்ளது.

செட்டிபாளையம் சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் த.விந்தியன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், எம்.கோபாலரெத்தினம், உட்பட கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவர் சங்க உறுப்பினர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.






























SHARE

Author: verified_user

0 Comments: