மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தினையும் அதனுடன் தொடர்புடைய செயற்திட்டங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (13) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் மற்றும் அரசாங்க அதிபருடன் அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எம்.எம்.ஹ{சைன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உட்பட பிரதேச செயலாளர்கள், அமைச்சின் கீழ் செயற்படும் திணைக்கள அதிகாரிகள், ஏனைய பல அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்துறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும், அதனுடன் தொடர்புபட்ட நீர்ப்பாசனத் துறை, மீன்பிடித்துறை, மண் அகழ்வு, வனவளங்கள், பாலங்கள் அமைத்தல், தென்னை, பனை வளர்ப்பு, கால்நடைகளுக்கான மேய்ச்சற்தரை போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டன
0 Comments:
Post a Comment