விஜயதசமி தினமான இன்று வியாழக் கிழமை (22) ஏடு தொடக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் சிறுவர்களுக்கு, ஏடு தொடக்கும் சம்பிரதாய நிகழ்வு இடம் பெற்றது.
நவராத்திரி பூஜையின் இறுதிநாளான இன்று ஆயுத பூஜைகள் இடம்பெற்று பின்னர் ஏடு தொடக்கப்பட்டது.
மூன்று தொடக்கம் ஐந்து வரையான சிறுவர்களுக்கு, ஆலயங்களில் அல்லது பாடசாலைகளில் குரு ஒருவரின் மூலம், சம்பிரதாய முறைப்படி விஜயதசமி தினத்தன்று கற்றலின் ஆரம்பத்திற்காக வேண்டி ஏடு தொடக்கும் நிகழ்வு இந்துக்களிடையே பன்நெடுங்காலமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment