16 Oct 2015

மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் வீதி புனரமைப்பு

SHARE
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிற்குள் அமைந்துள்ள நொச்சிமுனை தரிசனம் வீதி கொங்ரிட் வீதியாக அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தரிசனம் வீதி மிக நீண்டகாலமாக சேதமடைந்திருந்த நிலையில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜோன் பாஸ்டர் பிரதி அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த வீதிக்கு பிரதி அமைச்சரினால் ஐம்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பொதுமக்களிடம் அவர்களது பிரதேசத்தில் நிலவுகின்ற மின்சாரம், வீதி, பாடசாலைகளில் நிலவுகின்ற வளப்பற்றாக்குறை போன்ற தேவைகளைக் கேட்டறிந்து கொண்ட பிரதி அமைச்சர் நொச்சிமுனை பிரதேசத்தின் தேவைகள் ஒன்றின் பின் ஒன்றாக நிவர்த்தி செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: