13 Oct 2015

துறைநீலாவணை பிரதான வீதியின் இருமரங்கிலும்; கழிவுகள் கொட்டப்படுவதை உடன் நிறுத்த வேண்டும்.

SHARE
(க. விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் இருமரங்கிலும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் தங்களின் கோழி இறைச்சிதவிர கோழியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை உரபேக்கில் இட்டு இவ்வீதியில் உள்ள பற்றைக் காடுகளுக்குள்ளும், வீதியிலும் அதிகாலை வேளை வீசிவிட்டு செல்கின்றனர்.
இதனால் வீதியில் பயணிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், அரச ஊழியர்கள் மிகுந்த அசௌசரிகங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் துர்நாற்றத்தை சகித்துக்கொள்ளமுடியாமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் துர்ப்பாக்கிய நிலையில் செல்கின்றதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வீதியானது மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதியாக இருக்கின்றது. கல்முனை மாநகர சபையின் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யும் கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் சட்டதிட்டத்திற்கு முரணான வகையில் மற்றவர்களுக்கு இக்கோழிக் கழிவுகளை அதிகாலை வேளை வீசிவிடுகின்றனர். 

குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் அதிகளவான கோழிக் கழிவு மூடைகள் இவ்வீதியில் சூட்சூமமான முறையில் வீசிவிட்டு செல்கின்றனர். இவ்வீதியை துறைநீலாவணை கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கங்கள், பொதுமக்கள் போன்றவர்கள் மாதத்திற்கு ஒரு தடவை கிராமத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் சிரமதானம் மூலம் துப்பரவு செய்து வைத்துள்ளனர்.
இது சம்பந்தமாக பொது அமைப்புக்களிடமும், பொதுமக்களிடமும், போன்றவர்களுக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் இதனை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியப் போக்கில் இருக்கின்றமையால் மீண்டும் வீசி வருகின்றதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. 

இதுமட்டுமல்லாமல் வீட்டுக்கழிவுகள், பிளாஸ்ரிக் பொருட்கள், இலத்திரணியல் உபகரணங்கள், பழைய போத்தல்கள், பழைய வீட்டுக்கழிவுகள் என்பவற்றையெல்லாம் வீசி வருகின்றனர். எனவே கல்முனை மாநகரசபை உரியவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் போது கோழிக் கடைகளின் கழிவுகளை உரிய முறையில் சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்காமல் அக்கழிவுகளை உரிய முறையில் அகற்றுவுதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது சாலச்சிறந்ததாகும். 
எனவே நல்லாட்சி மிக்க இந்த நாட்டிலுள்ள களுவாஞ்சிக்கு, கல்முனை பொலிஸார், இராணுவத்தினர், கல்முனை மாநகரசபை போன்றவற்றின் உயர் அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கை உடன் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர் பார்த்திருக்கின்றனர். 












SHARE

Author: verified_user

0 Comments: