கிழக்கு மாகாண, முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரணை செய்ய, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 11ம் திகதி மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்குத் தொடர்பில் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டார்.
பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பலபிடிய பிள்ளையானை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளார்(ad)
0 Comments:
Post a Comment