16 Oct 2015

யானை தாக்கி இராணுவ வீரர் காயம்

SHARE
திருகோணமலை -ஹபரண பிரதான வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மின்னேரியா சென்ற இராணுவ வீரரை கித்துள் உத்துவ கல்ஓயா பாலத்துக்கு அருகில் காட்டு யானை தாக்கியதில்
காயமடைந்த அவரை இன்று வெள்ளிக்கிழமை காலை கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை, பாலையூற்று இல -35  ஹெம்பெட் மாவத்தையில் வசித்து வரும் சண்முகம் சஞ்சய கிருஷ்ணா (வயது 40) என்பவரே காயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து மின்னேரியா இராணுவ முகாமிற்கு செல்லும்போதே யானை தாக்கியுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: