5 Oct 2015

சட்டம் தெரியாத சட்டத்தரணி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் - மாகாணசபை உறுப்பினர் எம். ராஜேஸ்வரன்

SHARE
பசுமையான நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் மரம் நடுகை மற்றும் கோழிக்குஞ்சுகளை வழங்கும் நிகழ்வு கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இன்று (05.10.2015) பெரியநீலாவணை-01 வீட்டுத்தோட்ட சூழலில் நடைபெற்றது.
இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் ஒரு சட்டத்தரணியாக இருந்தும் சட்டம் தெரியாதவராக உள்ளார். சுற்றுச் சுழலை பாதுகாப்பது இனம், மதம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரினதும் கடமையாகும்.

அண்மையில் நற்பிட்டிமுனை முருகன் கோவிலுக்கு அருகிலுள்ளள ஆற்றுக்குள் நற்பிட்டிமுனை முஸ்லிம் சகோதரர்கள் மாடுகள் வெட்டிய கழிவுகளை வீசியிருந்தார்கள். இந்தவிடயம் தொடர்பாக பொது மக்கள் எனக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டேன்.

கழிவுகளை அப்புறப்படுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டேன். அவர்கள் என்னுடைய கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. உடனே கல்முனை பொலிஸாருக்கு விடயத்தை அறிவித்தேன். இஸ்தலத்துக்கு வருகைதந்த பொஸிசாருடன் சம்பந்தப்பட்டவர்கள் முரன்பட்டதை தொடர்ந்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.ஏ. ஹப்பார் வருகைதந்து ‘பொலிஸாரின் கடமைக்கு இடையூறாக செயற்பட்டவர்களை வீடியோ ஆதாரத்தை கொண்டு கைது செய்வேன்.

ஏல்லோரும் கலைந்து செல்லுங்கள்’ எனக்கூறினார். இதன் பின்னர் சம்பந்தப்பட்ட 05 முஸ்லிம் நபர்களுக்கு நீதிமன்றம் தலா 10000.00 ரூபா வீதம் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டது. இது நீதிமன்றம் வழங்கிய சட்ட நடவடிக்கையாகும்.

மாறாக நான் வழங்கிய சட்டநடவடிக்கை அல்ல. இதனை புரிந்து கொள்ளாத சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் என்மீது இனவாதம் பேசுவதாக குற்றம் சாட்டி ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார். தமிழர்களுக்கு ஒருநீதியும் முஸ்லிம்களுக்கு ஒருநீதியும் என நீதிகிடையாது. நாம் இன மதம் பாராது சேவைசெய்து வருகிறோம்.

ஊடகங்கள் மூலம் மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறார். எனத் தெரிவித்தார்.
உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்திரன், பிரதேச திவிநெகும அதிகாரி எஸ் சிவம், பொருளாதார அபிவிருத்தி, கிராமசேவை, சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: