24 Oct 2015

பிரசாந்தனுக்கு தடுப்புக்காவல்

SHARE
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் திங்கட்கிழமை (16) வரை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ், நேற்று வெள்ளிக்கிழமை (23) அனுமதியளித்துள்ளார்.
2008ஆம் ஆண்டி டிசெம்பர் 13ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், காத்தான்குடி பொலிஸார் இவரை நேற்று வெள்ளிக்கிழமை (23) கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, அவரை மூன்று நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு, பொலிஸார் கோரியிருந்தனர். இதன்பின்னரே, பிரசாந்தனை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  
SHARE

Author: verified_user

0 Comments: