அன்பான கருணை உள்ளங்களே !
பெற்றோரை இழந்த மிகவும் வறிய ஏழை மாணவன் ஒருவரின் வருடாந்த கல்விச் செலவினை பொறுப்பெடுங்கள்!
எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி கடந்த கால அனார்த்தங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு முற்றிலும் இலவசமாக தொழில் கல்வியினை வழங்கி வருகின்றது.
இக் கல்லூரி ஏழை மக்களுக்காக இதயம் உருகிய உத்தமர் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் விரும்பிய வகையில் ஒவ்வொரு வருடமும் ஏழை மக்களுக்கு பல்வேறு மனிதநேயப் பணிகளை ஆற்றி வருகின்றது.
தற்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மாணவர்களின் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் முக்கிய காரணமாக பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வறுமை நிலை மற்றும் பெற்றோரை இழந்த ஏழை மாணவர்களின் எண்ணிக்கை என்பனவாக கருதப்படுகின்றது. எனவே எதிர்வரும் 2016 ஜனவரி மாதம் சுவாமி விவேகானந்தரின் 154வது பிறந்த தினத்தை முன்னிட்டு வறுமை நிலையில் உள்ள மாணவர்களை பொறுப்பெடுத்து அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பங்காற்றுவதே எமது நோக்கமாகும்.
எமது கல்லூரியில் பயிற்சிபெற்ற கிராமந்தோறும் உள்ள இளைஞர் யுவதிகளினால் உருவாக்கப்பட்ட “விவேகானந்த இளைஞர் அணி” மற்றும் கிராம சேவகர்கள் பாடசாலை அதிபர்களின் உதவியுடன் வறிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்வித் தேவைக்கு ஒரு வருடத்திற்கு வேண்டிய அப்பியாச கொப்பிகள் பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஏனைய கல்விச் செலவுகளினை பொறுப்பெடுத்தலோடு அடையாளம் காணப்பட்ட கிராம மட்டத்தில் நிலவும் தேவைகளினையும் இத்துடன் இணைத்துள்ளோம். தாங்கள் இதில் ஏதாவதுக்கான நிதியுதவி வழங்கி தாங்களும் புண்ணியந்தரவல்ல இப்புனித பணியில் இணைந்துகொள்ளுமாறு மிக்க தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எனவே தாங்கள் வழங்கும் இவ் உதவியினை விழா நடைபெறும் திகதியில் குறித்த மாணவனுக்கு தாங்கள் அல்லது தங்களின் பெற்றோர் அல்லது தங்களது உறவினர்கள் நேரடியாக வருகை தந்து வழங்கலாம்.
நன்றி
இவ்வண்ணம்
சமூகப் பணியில்
நிருவாகிகளும் பயிலுனர்களும்
விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி
புதுக்குடியிருப்பு மட்டக்களப்பு.
நிதியுதவிக்கான வங்கிக் கணக்கு விபரம்.
A/C Name : Vivekananda College of Technology
A/C No : 0730-33526625-001
S/C : SEYBLKLX
Bank : Seylan Bank, Batticaloa Branch, Sri Lanka
Please click to link see the more activities for our college
0 Comments:
Post a Comment