மிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி நாளை மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், புத்திஜீவிகள், சிறைவாசம் அனுபவித்துவரும் சொல்லொன்னா துன்பதுயரங்களை தாங்கி வாழ்பவர்களின் உறவுகள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு த.தே.கூட்டமைப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பிர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்துரைக்கையில், தமிழ் இனம் ஆண்ட இனம் ஆனால் இன்று தாங்கள் அனுபவிக்கவேண்டிய வயதில் பல வருடக்கணக்கில் எந்தவித வாக்குறுதியும் இன்றி சிறைவாசம் அனுபவிக்கும் எமது உறவுகளுக்காகவேண்டி மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் ஆலயமுன்னறில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதப்போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு எமது
அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி போராடவேண்டும்.
நாங்கள் இழந்தவைகள் பல அவற்றை எம்மால் ஈடுசெய்ய முடியாதளவிற்கு நாங்கள் இன்று இருந்து கொண்டிருக்கின்றோம் இன்று எத்தனையோ தமிழ் இளைஞர்கள் எந்தவிதமான விசாரணைகளும் இன்றி வருடக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள் அதனால் அவர்களது குடும்பங்கள் படும் வேதனைகள் சொல்லிலடங்காதவை.
இந்த நாட்டிலே இன்று நல்லாட்சி நடைபெறுகின்றது என்றால் அந்த ஆட்சி அனைவருக்கும் உரிய ஆட்சியாக இருக்கவேண்டும் அதனை விடுத்து அது வெறுமனே ஒரு இனம் சார்ந்நததாக அமையக்கூடாது அவ்வாறு அமையுமாக இருந்தால் அதற்கு பெயர் நல்லாட்சி அல்ல இன்று யுத்தம் மௌனிக்கப்பட்டு பல வருடங்களாகியும் அதனுடைய வடு இன்னும் நீங்கவில்லை என்பதற்கு இன்று சிறையில் இருக்கும் கைதிகளை தக்க சான்றாகக்காட்முடியும்.
எனவே நாளை நடைபெறவிருக்கும் உன்னாவிரதப்போராட்டத்திற்கு த.தே.கூட்டமைப்பு சார்பாக அனைத்து ஆதரவாளர்களையும், பற்றாளர்களையும் பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு மிகவும் தயவாகக்கேட்டுக்கொள்கின்றேன் எனவும் கூறினார்
0 Comments:
Post a Comment