22 Oct 2015

எப்போது தீரும் இந்த அவலநிலை? (பட்டிருப்பு – பழுகாமம் வரையிலான பாதை)

SHARE
(திலக்ஸ் ரெட்ணம்)

நாட்டின் பல பாகங்களில் பலவாறான அபிவிருத்திப்பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது தான். மனித வாழ்கையின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் பௌதீகக் காரணிகளில் பாதையும் ஒன்றாக காணப்படுகின்றது.
அந்த வகையில் பட்டிருப்பு பாலத்தில் இருந்து பழுகாமம் வரையிலான வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு உரித்தான பாதை போடப்பட்டு சுமார் ஐம்பது வருடங்களிற்கு மேலாகின்றது. அப் பாதை பன்னெடுங்காலமாக சிதைவடைந்த நிலையில் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பள்ளமும் படுகுழியுமாக காணப்படும் இப்பாதை மழை தூற்றலுக்கே செல்லமுடியாத நிலை ஏற்படுகின்றது. இப்பாதையினால் ஒரு நாளைக்கு பல பயணிகள் பயணம் செய்கின்றனர்.
வருடந்தோறும் இப்பாதைக்கு பள்ளம் படுகுழிகளையே நிரப்பிய வண்ணமே உள்ளனரே தவிர இப்பாதையினை புதிதாக திருத்தியமைக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பல அரசாங்கம் மாறியும், பல அரசியல் வாதிகள் மாறியும் தீராத பிரச்சினையாக உள்ளதாகவும், வீதி அபிவிருத்தி திணைக்களத்தினரும்  மழைகாலம் வந்தால் விழித்துக் கொள்வதாகவே தெரிவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இப்பிரதேசத்தில் இருக்கும் அரசியல் வாதிகளும் கூட இவ்விடயங்கள் பற்றி கண்மூடித்தனமாக செயற்படுகின்றனரா? என்று மக்களிடையே கேள்வி எழும்புகின்றது.
ஆகவே இவ்வீதிக்குப் பொறுப்பான அதிகாரிகள் இப்பாதையினை புதிதாக செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு உகந்த முறையில் கையளிக்குமாறு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீதி அபிவிருத்தி திணைக்கள பிராந்திய அதிகாரி அவர்களின் கவனத்திற்கு!!!!








SHARE

Author: verified_user

0 Comments: