மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து அடை மழை பெய்தவண்ணமுள்ளன. இதனால் மக்களின் இயல்பு நிலையில் சற்று தளம்பல் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்களிலும் மக்கள் பலத்த சிரமங்களை எதிர் காண்டு வருகின்ற இந்நிலையில் தாழ்நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. கிராமங்களிலுள்ள பெரும்பாலான உள்வீதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதுடன்,
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் பெரிய குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட் கிழமை (26) காலை 8.30 மணிமுதல் செவ்வாய் கிழமை காலை 8.30 மணிவரையில் மட்டக்களப்பு நகரில் 9.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 66.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாவில் 155.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த மாதம் 470.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், இந்த வருடத்தில் 970.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக கே.சூரியகுமார் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் செவ்வாய்க் கிழமை (27) காலை 6 மணிவரையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக் குளம் 21 அடி 5 இஞ்சி நீர்மட்டமும், வாகனேரிக் குளம் 11 அடி 3 இஞ்சி நீர்மட்டமும், தும்பங்கேணிக் குளம் 14 அடி 4 இஞ்சி நீர்மட்டமும், கித்துள்வௌ குளம் 6 அடி இஞ்சி நீர்மட்டமும், கட்டுமுறிவுக் குளம் 5 அடி 11 இஞ்சி நீர்மட்டமும், உறுகாமம் குளம் 11 அடி 8 இஞ்சி நீர்மட்டமும், நவகிரிக் குளம் 17.8 அடி இஞ்சி நீர்மட்டமும், வெலிக்காக்கண்டிக் குளம் 15 நீர்மட்டமும், வடமுனைக் குளம் 9 அடி 11 இங்சி நீர் மட்டமும் காணப்படுவதாக இக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment