உள்ளூராட்சி மன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்புத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபைப் பிரிவு ஏறாவூர் நகரசபைப் பிரிவு ஓட்டமாவடி பிரதேச சபை பகுதி ஆகிய இடங்களில் சுத்திகரிப்புப் பணி நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தை சுத்தமாக வைத்திருக்கும் வேலைத்திட்டத்தின் மூன்று நாள் நிகழ்வின் முதலாம் நாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வு அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சுத்திகரிப்பு நிகழ்வில் அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் களத்தில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment